சிதம்பரம்: கழிவுநீர் கலந்து குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், மக்கள் பயன்படுத்தாத குடிநீருக்கான வரியை சிதம்பரம் நகராட்சி ரத்து செய்ய வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சிதம்பரம் நகர தலைவர் தில்லை ஆர்.மக்கீன் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சிதம்பரம் நகராட்சி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக புதிய புதை சாக்கடை பணிகள் நடைபெற்ற போது, கழிவுநீர் குழாய்கள் உடைப்பெடுத்து குடிநீர் குழாயுடம் கலந்து கழிவுநீர் கலந்த குடிநீர் இதுநாள் வரை விநியோகம் செய்யப்படுகிறது.
இதுவரை நகராட்சி நிர்வாகத்தால் உடைப்பை சரி செய்ய முடியாமல் தினறிவருகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதால், மக்கள் யாரும் பயன்படுத்து இல்லை.
இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் குடிநீர் வரியை கட்டுமாறு கட்டாய வசூல் செய்து வருகிறது. குடிநீர் வரியை கட்டவில்லை எனில், புதை சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கழிவுநீர் கலந்து வரும் குடிநீரை யாரும் பயன்படுத்தாத நிலையில் குடிநீர் வரியை கட்டாயமாக வசூலிப்பது கண்டனத்திற்குரியது. எனவே சிதம்பரம் நகராட்சியில் நிலுவையில் உள்ள குடிநீர் வரியை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என கடிதத்தில் தில்லை ஆர்.மக்கீன் தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


