தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆண்டிபட்டி: பிரிந்துசென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிரிந்து சென்ற குட்டி யானையை தாயுடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News image

பிரிந்துசென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி

Updated On :23 ஏப்ரல் 2021, 10:33 am

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிரிந்து சென்ற குட்டி யானையை தாயுடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான இப்பகுதியில் யானை, புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. 

இந்நிலையில் அரசரடி வனப்பகுதிகள் வியாழக்கிழமை இரவு கண்ணீர் தேடிவந்த தாய் யானையும், குட்டி யானையும் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிணற்றில் தவறி விழுந்த தாய் யானையை மீட்டனர். அப்போது மீட்கப்பட்ட யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. 

மேலும் கிணற்றில் தத்தளித்த குட்டி யானையை மீட்க முடியாமல் பொதுமக்கள் மேகமலை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் குட்டி யானையை மீட்டனர். தாய் யானையை  பிரிந்த குட்டி யானை பரிதவித்தது. இதனைத் தொடர்ந்து பிரிந்து சென்ற தாய் யானையுடன் மீண்டும் குட்டி யானையைச்  சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.