கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பெண் உள்பட இருவருக்கு கரோனா: அவிநாசி மின்வாரிய அலுவலகம் மூடல்

ஒரு பெண் உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி மின்வாரிய அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டது.

News image

அவிநாசி மின்வாரிய அலுவலகம் மூடல்

Updated On :23 ஏப்ரல் 2021, 9:59 am

DIN

ஒரு பெண் உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி மின்வாரிய அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டது.

அவிநாசி பகுதியில் கரோனா நோய் தொற்று கடந்த மாதம் முதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் 40 வயது பெண், 42 வயது ஆண் உள்பட இருவருக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக அவிநாசி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம், தொழில்நுட்ப பிரிவு, நிர்வாகப் பிரிவு, வருவாய் பிரிவு, உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் உள்பட  முழுவதும் மூன்று நாள்களுக்கு அடைக்கப்பட்டது. மேலும் மின்வாரிய பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பணிபுரியம் 50க்கும் மேற்பட்டோருக்கு சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல சேவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 57 வயது ஆண் காவலருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சேவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.