விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லத் தடை: ககன் தீப் சிங் பேடி

கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 8:43 am

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, 

கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை. மக்கள் கவனக்குறைவாக இருந்தால் கரோனா 3 ஆவது அலை வரும். எனவே, அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டும் மக்கள் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும்.

திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போது தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். விஷேச நாள்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்ய வேண்டும் .

தவிர்க்க முடியாத காரணத்தினால் சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.