ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘படத்திறப்பிற்கு முறைப்படி அழைத்தும் அதிமுக பங்கேற்கவில்லை’: துரைமுருகன்

முன்னாள் முதல்வர் படத்திறப்பு விழாவிற்கு முறைப்படி தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் துரைமுருகன்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:19 am

DIN

முன்னாள் முதல்வர் படத்திறப்பு விழாவிற்கு முறைப்படி தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் படத்திறப்பு விழா சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்டு தலைமை உரையாற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் படத்தை திறந்து வைத்தார். ஆனால், இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியதாவது,

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா திட்டமிட்டபோதே முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து, இவ்விழாவில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும், குடியரசுத் தலைவர் அமரும் மேடையில் எதிர்க்கட்சித் தலைவரும் அமர்ந்து வாழ்த்துரையாற்ற வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுங்கள் என்றார்.

அதன் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு அழைத்தேன். ஆனால், சற்று நேரத்தில் பேரவை செயலாளரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டோம் எனக் கூறிவிட்டார்.

ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் மட்டுமே அனுப்பப்பட்டதால் திமுகவினர் பங்கேற்கவில்லை. ஆனால், நானே தொடர்பு கொண்டு முறைப்படி அழைத்தும் அதிமுகவினர் பங்கேற்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.