தீரன்சின்னமலைக்கு அதிமுக சார்பில் சங்ககிரியில் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம்


சங்ககிரி: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை மலர்வளையங்கள் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும், அதே போல் தமிழக அரசு சார்பில் ஈரோடு - பவானி பரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன்சின்னமலை நினைவு சின்னத்திலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்ககிரி எஸ்.சுந்தரராஜன், ஓமலூர் ஆர்.மணி, பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.அருள், எஸ்.சதாசிவம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.செம்மலை, எஸ்.ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவி எம்.மகேஸ்வரி மருதாசலம், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலர் ரத்தினம், துணை செயலர் மருதாசலம், முன்னாள் தொகுதி கழகச்செயலர் வி.ஆர்.ராஜா, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...