சென்னையில் அதிகரிக்கும் கரோனா: 22 மாவட்டங்களில் பாதிப்பில்லை
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது


சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஒருநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 22 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக 203 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,38,727-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து புதிதாக 138 பேர் குணமடைந்தனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 5,28,603-ஆக அதிகரித்துள்ளது. 1,802 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக 29 பேர் உயிரிழந்த நிலையில், இணை நோய் இல்லாத 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
சென்னையைப் போன்று கோவையில் 208 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், தஞ்சாவூரில் 118 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...