ஆக. 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்: இரா.முத்தரசன்

ஆக. 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 
ஆக. 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்: இரா.முத்தரசன்
Published on
Updated on
1 min read

ஆக. 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் 04.08.2021 - புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோ.பழனிசாமி, நா.பெரியசாமி, பி.பத்மாவதி, எம்.ஆறுமுகம் மற்றும் டி.எம்.மூர்த்தி, க.சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியுள்ள போதிலும், ஆளும் பாஜக ஜனநாயக நெறிமுறைகளையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் நிராகரித்து அவை நடவடிக்கைகளை முடக்கி வைத்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கும், சுயசார்புக்கும் பேராபத்தாக எழுந்துள்ள குடிமக்களின் குறிப்பாக எதிர்கட்சிகள், படைப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், நீதித்துறை உள்ளிட்ட அறிவுத்துறையினரின் அந்தரங்க உரையாடல்களை ஒட்டு கேட்டு வரும் பெகாசஸ் செயலி விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள், நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் விலை உயர்வு, ஒன்பது மாதங்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தல், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம், நோய்த் தொற்றுப் பரவல் நெருக்கடி கால ரொக்கப்பண உதவி செய்ய வேண்டியதன் அவசியம் போன்ற மிக முக்கிய பிரசனைகளை விவாதிக்க அனுமதிக்க மறுக்கும் பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தவும், அஇஅதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்துதல் - எளிமையாக்குதல்) சட்டம் 2019 ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் வரும் 23.08.2021 முதல் 27.08.2021 (திங்கள் முதல் வெள்ளி வரை) தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள் தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்துவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் முடிவு செய்துள்ளது.
இத்தகைய மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் பொது ஊரடங்கிற்கு உட்பட்டு, முகக் கவசம் அணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com