ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்

அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மதுசூதனன் (வயது 80) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

News image

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்

Updated On :5 ஆகஸ்ட் 2021, 11:01 am

DIN

அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மதுசூதனன் (வயது 80) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

மதுசூதனன், 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.