நீடாமங்கலத்தில் வங்கி உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

நீடாமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி மேலாளர் சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
நீடாமங்கலத்தில் வங்கி உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை
நீடாமங்கலத்தில் வங்கி உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை


நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி மேலாளர் சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

திருநெல்வேலி மாவட்டம் மேலகரம் விவேகானந்தர்  4 வது குறுக்குத் தெருவைச்சேர்ந்த பாண்டியராஜன் மகன் பிரதீப்சண்முகம் (28). இவர் நீடாமங்கலம் மேலராஜவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி (இந்தியன்வங்கி) ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகதவர். 

நீடாமங்கலம் வடக்கு வீதியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றின் மாடிதளத்தில் குடியிருந்து வந்தார்.
சனிக்கிழமை காலை வழக்கம் போல தூங்கி எழுந்து தனது பணிகளை கவனித்து வந்த பிரதீப் சண்முகம் குடியிருப்பின் கீழ்தளத்தில் காலை 8 மணி போல் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு மாடிதளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டு தூக்கில் தொங்கியதாக தெரிகிறது. தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன், சிறப்பு காவல் உதவிஆய்வாளர் ஆரோக்கியதாஸ் மற்றும் காவலர்கள் குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி தாழ்ப்பாள் போட்ட கதவை திறந்து உள்ளே நுழைந்து பிரதீப் சண்முகத்தின் உடலை மீட்டனர்.

அவர் இறந்து போனது தெரியவந்தது. இதனையறிந்து அவருடன் பணியாற்றும் வங்கியின் அலுவலர்களும் குடியிருப்புப் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வங்கி உதவிமேலாளர் பிரதீப் சண்முகம் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வங்கி உதவிமேலாளர் பிரதீப்சண்முகத்திற்கு வீட்டில் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.  இளம் வயதில் வங்கி உதவி மேலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நீடாமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் சண்முகம் மறைவு வங்கி அலுவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com