கருணாநிதி நினைவு நாள்: அருப்புக்கோட்டையில் திமுகவினர் அஞ்சலி
கருணாநிதி நினைவு நாள்: அருப்புக்கோட்டையில் திமுகவினர் அஞ்சலி

கருணாநிதி நினைவு நாள்: அருப்புக்கோட்டையில் திமுகவினர் அஞ்சலி

அருப்புக்கோட்டையில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, வணங்கி, மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

அருப்புக்கோட்டையில் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, வணங்கி, மரியாதை செலுத்தப்பட்டது.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் சார்பில் சிறப்பு மலர்மாலை அணிவித்து, வணங்கி, மரியாதை செலுத்தி 3 நிமிட நேரம் மெளன அஞ்சலி செய்யப்பட்டது. 

அருப்புக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இரமேஷ் ஆகியோர் கருணாநிதியின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எம்.விஜயக்குமார், ஒன்றியச்செயலாளர்கள் பொன்ராஜ் பாலகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, அருப்புக்கோட்டை அண்ணாசிலை முன்பாக வைக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு பிரம்மாண்ட மலர்மாலை அணிவித்து, வணங்கி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

3 நிமிட நேரம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. உடன்,தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுராமானுஜம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் நேரில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com