திருக்குவளை: கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு

திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருக்குவளையிலுள்ள அவர் பிறந்த இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய  திமுகவினர்
கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருக்குவளையிலுள்ள அவர் பிறந்த இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினர்

திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்திய அரசியலில் முக்கிய பங்கை வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்து 1969-இல் இருந்து கட்சியை வழி நடத்தினார். சமூகப் பணியில் அவருடைய சீரிய முயற்சியால் தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக  செயல்பட்டவராவார். 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சியையும், தமிழ்நாட்டையும் வழி நடத்தி, தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு திராவிட சக்தியாக விளங்கிவர் என்பது குறிப்பிட்ட தக்கது.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில், அவருடைய மறைவு தமிழகத்துக்கு பெரும் ஒரு இழப்பாக இன்றளவும் இருந்துவருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினமானது, அவர் பிறந்த  ஊரான  நாகை மாவட்டம் திருக்குவளையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு கருணாநிதியின் நினைவு தினத்தன்று திருக்குவளையிலுள்ள வீட்டில் அவருடைய மார்பளவு திருவுருவ சிலையை காணொளி வாயிலாக தற்போதைய தமிழக முதல்வரான மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நிகழாண்டு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருக்குவளையிலுள்ள அவர் பிறந்த இல்லத்தில், அங்குள்ள திருவுருவச் சிலைகளுக்கு  திமுகவினர் சார்பில்  மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது.

கருணாநிதி நினைவு இல்லத்தில், நினைவு அஞ்சலி செலுத்திய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர்
கருணாநிதி நினைவு இல்லத்தில், நினைவு அஞ்சலி செலுத்திய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர்

திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான, க.ராஜேந்திரன், ப. கோவிந்தராசன், மாவட்ட துணை செயலாளர் ஜி.மணோகரன், ஒன்றியச் செயலாளர்கள் கீழையூர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், தலைஞாயிறு மகா.குமார், கீழ்வேளூர்(தெற்கு) கே.பழனியப்பன், திருமருகல் (தெற்கு) ஆர்.டி.எஸ்.சரவணன், திருமருகல்(வடக்கு) செல்வ.செங்குட்டுவன், நகர செயலாளர் எம்.ஆர்.செந்தில்குமார், தலைஞாயிறு ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.ஜி. தமிழரசி,திமுக நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன், பேரூர் கழக பொறுப்பாளர்கள் வேளாங்கண்ணி மரிய சார்லஸ், தலைஞாயிறு சுப்பிரமணியன் ,மாவட்ட பிரதிநிதிகள் இல.பழனியப்பன், மு.ப. ஞானசேகரன், ராம.இளம்பரிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும், அதனைத் தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தனது சங்க நிர்வாகிகளுடன் இணைந்து, திருக்குவளையிலுள்ள கருணாநிதியின் நினைவு இல்லத்தில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com