ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனையில் உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய வித்யா பவன்(பிவிபி) பள்ளியின் தாளாளர் டாக்டர் ராமக்கிருஷ்ணன், இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐஎம்ஏ) தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி வைத்து, உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பிய 50 நபர்களுக்கு, அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடல் உறுப்பு தான அட்டையை வழங்கினர்.