ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு- முக்கிய அறிவிப்புகள்

2021-22 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:23 am

DIN

2021-22 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், 

பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள். நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும்.

தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும். 

2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக ஐஇருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது. 

கற்றல் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழகத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி மேம்படுத்துதல், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தரவுகளை கண்காணிக்க, 433 கல்வி ஒன்றியங்களுக்கு ஆசிரியர்களுக்கு 40 டேப்லட் வழங்கப்படும்.  

8 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை பெற உறுதி செய்யும்பொருட்டு ரூ. 66 கோடி செலவில் 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' கொண்டு வரப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.