15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம்

 தமிழக காவல்துறையில் 15 அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம்

 தமிழக காவல்துறையில் 15 அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகள் சுதந்திர தினத்தையொட்டி, சிறந்த பொதுச்சேவைக்கான காவல் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பதக்கம் பெறுவோா் விவரம்:

தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி, செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி அ.அமல்ராஜ், சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் சு.விமலா, திருச்சி மாநகர காவல்துறையின் கோட்டை போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ந.நாவுக்கரசன், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு தலைமைக் காவலா் பா.பிரேம் பிரசாத் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல தமிழக முதல்வரின் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கத்துக்கு 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் விவரம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வெ.செல்வி, கன்னியாகுமரி சிபிசிஐடி ஆய்வாளா் க.சாந்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ரவி, கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகா் காவல் நிலைய ஆய்வாளா் க.சாயிலட்சுமி, ராமநாதபுரம் சத்திரக்குடி காவல் நிலைய ஆய்வாளா் ஆ.அமுதா, திண்டுக்கல் சிபிசிஐடி காவல் ஆய்வாளா் வே.சந்தானலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூா் காவல் நிலைய ஆய்வாளா் சு.சீனிவாசன், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளா் மு.கனகசபாபதி, தென்காசி காவல் நிலைய ஆய்வாளா் க.ஆடிவேல், சேலம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ப.ஆனந்தலட்சுமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் பரிசு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com