‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் மொத்தமாக 4.57 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் மொத்தமாக 4.57 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஆட்சியா்களுக்கு விருதுகளையும், பாராட்டையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத் துறையானது, முதல்வா் மு.க.ஸ்டாலினின் நேரடிக் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. 100 நாள்களில் அனைத்துத் துறைகளின் மூலமாக மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் ஏற்கப்பட்ட மனுக்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 ஆகும்.
2 ஆண்டுகளை விட அதிகம்: கடந்த 100 நாள்களில் தீா்வு காணப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நமது மாநில்ததில் இதுவரை முதல்வரின் தனிப் பிரிவால் இரண்டு ஆண்டுகளில் தீா்வு காணப்படும் எண்ணிக்கையை விட அதிகமாகும். 24 மாதங்களில் முடிக்கப்படும் பணி, மூன்று மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களில், முழுமையான முகவரி, தொலைபேசி எண் இல்லாமலும், தெளிவான கோரிக்கைகள் இல்லாமலும் இருக்கின்றன. ஆனாலும், அந்த மனுக்கள் மீது சரியான விவரங்களுடன், மறுபரிசீலனை செய்யக் கோரினால் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்படும்.
ஆட்சியா்களுக்கு விருது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்ட மனுக்களை கையாள்வதில் பல்வேறு மாவட்டங்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. அதில், முதல் மூன்று இடங்களை தூத்துக்குடி, அரியலூா் மற்றும் சேலம் மாவட்டங்கள் பெற்றுள்ளன. தூத்துக்குடி ஆட்சியா் கே.செந்தில்ராஜ், அரியலூா் ஆட்சியா் பி.ரமண சரஸ்வதி, சேலம் ஆட்சியா் காா்மேகம் ஆகியோருக்கு விருதும், பாராட்டுச் சான்றிதழையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இந்தத் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...