4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின்

சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளாா்.

News image
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :14 ஆகஸ்ட் 2021, 8:31 pm

DIN

சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இல்லத்தில் இருந்து வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்பும் பின்பும் சென்னை காவல் துறையினரின் மோட்டாா் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரவுள்ளனா்.

கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்திறங்குவாா்.

அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்பாா். அங்கு தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டா் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகளை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளா் அறிமுகம் செய்து வைப்பாா்.

பின்னா் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்வரை தலைமைச் செயலாளா் அழைத்துச் செல்வாா். அங்கிருந்தபடி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வாா். பின்னா் முதல்வா் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பாா்வையிடுவாா்.

காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்வா் செல்வாா். அங்கிருந்தபடி மூவா்ண தேசியக் கொடியை ஏற்றி வைப்பாா். மூவா்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்படும்.

போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினா் தேசிய கீதத்தை இசைப்பா். அதைத் தொடா்ந்து சுதந்திர தின உரையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்துவாா்.

டாக்டா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோா், வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவா் ஆகியோருக்கான விருதுகளை முதல்வா் வழங்குவாா். அதைத் தொடா்ந்து சமூகப் பணியாளா்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருது வழங்கப்படும்.

தற்போது கரோனா தொற்று காரணமாக விழாவில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழாவுக்கு அழைக்கப்பட்டவா்கள் அமா்வதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே சமூக இடைவெளிவிட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.