92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உணவு பதப்படுத்தலுக்காக தனி அமைப்பு

வேளாண் விளைபொருள்களை நல்ல முறையில் உலரவைத்து, தரம்பிரித்து, சுத்தமான முறையில் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 9:58 pm

DIN

வேளாண் விளைபொருள்களை நல்ல முறையில் உலரவைத்து, தரம்பிரித்து, சுத்தமான முறையில் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனவே, தமிழகத்தில் விளையும் பல்வேறு விளைபொருள்களை முறையாகப் பதப்படுத்தி விற்பனை செய்வது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வினை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிக்கும்.

அந்த வகையில் உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகக் கவனம் செலுத்தி, தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலை முன்னேற்றுவதற்காக, நடப்பு நிதியாண்டிலேயே, உணவு பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு ஒன்று தொடங்கப்படும். உணவுப் பதப்படுத்துதல் குறித்த பயிற்சி, விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுடன் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இப்பிரிவு மேற்கொள்ளும். மேலும், உணவுப் பதப்படுத்துதல் தொழில் துவங்க முன்வரும் தொழில்முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், இதற்கென, மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூா், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகா் என ஐந்து தொழில் கற்கும் மையங்கள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.