இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேர வந்த மாணவருக்கு மாலை அணிவித்து மரியாதை

படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை புதியதாக சேர வந்த மாணவரை மாலை அணிவித்து வரவேற்று, ரூ.1000 வழங்கியுள்ளார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ். 

News image
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதியதாக சேர வந்த மாணவரை தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி மாலை அணிவித்து வரவேற்றனர்.
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை புதியதாக சேர வந்த மாணவரை மாலை அணிவித்து வரவேற்று, ரூ.1000 வழங்கியுள்ளார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ். 

படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதியதாக சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் கடந்த கல்வியாண்டு ஆன்ட்ராய்டு மொபைல் போன் வழங்கினார். இந்த ஆண்டு தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து வழங்கி வருகிறார்.

வத்திராயிருப்பு பகுதியில் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர் சி.ஸ்ரீஹரி, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வந்திருந்தார். அவரை தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி க.மகேஸ்வரி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

மேலும், மாணவரது சேர்க்கையை உறுதி செய்யப்பட்ட பின்னர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் இப்பள்ளியில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு மற்றும் ரூ.1000-யை மாணவரின் தாய் சி.பொன்செல்வியிடம் வழங்கினர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புக்கேற்ற அடிப்படை பயிற்சிகள், ஒப்படைப்புகள் மாணவர்களின் மனம் மகிழ வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒப்படைப்புகளைச் செய்து, கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை படித்து வருகிறார்கள். தொடர்ந்து பள்ளியைத் தேடி தனியார் பள்ளி மாணவர்கள் வந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.