ஜனநாயகம், மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை செயல்படுத்தி தமிழகமும், இந்தியாவும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற பாடுபடுவோம், அயராது உழைத்திடுவோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச்செய்தி:
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய முக்கிய அம்சங்கள் கொண்ட உன்னதமான அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய நாட்டுக்கு தந்திருக்கும் சுதந்திரதத்தைப் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. தங்கள் வியா்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் வணக்கம் செலுத்தி - நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.
அனைத்துத் துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடையும் இலக்குடன் தமிழகமும், இந்திய நாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற பாடுபடுவோம் - அயராது உழைத்திடுவோம் என்று 75-ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
சட்டென்று மாறுது வானிலை பாடல் வெளியீடு!

"என்னைப் பேச விடுவதேயில்லை!" நாடாளுமன்றத்தில் Rahul Gandhi பேச்சு! | BJP | Congress
வீடியோக்கள்

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

