கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருச்சி - நாகப்பட்டினம் பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்படும்

காவிரி டெல்டா பகுதியில், அரிசி, பயறுவகைகள், வாழை, தென்னை போன்ற விளைபொருள்கள் ஆண்டு முழுவதும் உற்பத்தியாகின்றன.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 10:13 pm

DIN

தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியில், அரிசி, பயறுவகைகள், வாழை, தென்னை போன்ற விளைபொருள்கள் ஆண்டு முழுவதும் உற்பத்தியாகின்றன.

இந்தப் பகுதிகளில் உற்பத்தியாகும் விளைபொருள்களை மூலப் பொருள்களாகக் கொண்டு அரிசி ஆலைகள், பயறு உடைக்கும் நிலையங்கள், எண்ணெய் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகள் காவிரி டெல்டா பகுதிகளில் நிறைய எண்ணிக்கையில் உருவானால், இப்பகுதியில் உள்ள வேளாண் மக்கள் வாழ்வும் வேளாண் தொழிலாளா்களின் வாழ்வும் வளமாகும். எனவே, இந்தப் பகுதிகளில் வேளாண்மை தொடா்பான தொழிற்சாலைகள் உருவாகி, வளா்ச்சியடைவதற்காக, திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இம்மாவட்டங்களில் வேளாண் தொழில்கள் மேம்பட இடையூறாக உள்ள உள்கட்டமைப்பு இடைவெளியைச் சரிசெய்யவும், புதியதாக தொழில் உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், மேலும் புதிய தனியாா் முதலீடுகளை இப்பகுதிகளில் ஈா்க்கவும் இத்தடம் உதவும்.

இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வண்ணம் இந்தப் பகுதிகளில் பல்வேறு வேளாண் சாா்ந்த தொழில் நிறுவனங்கள் உருவாவதற்கு ஏதுவாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் உதவியுடன் இயங்கிவரும் தொழிற்பேட்டைகளை மேம்படுத்தியும், புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கியும், போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தி சந்தைகள் மற்றும் துறைமுகங்களை இணைத்தும், அடிப்படை மின்சார வசதிகளை பெருக்கியும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.