கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு

News image

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:46 pm

Syndication

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக, உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையை அடுத்த பூதங்குடி கிராமத்தில் வசிப்பவா் மோகன்தாஸ் மனைவி மணிமேகலை. இவா், பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

தாயும், வயிற்றில் உள்ள குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்த நிலையில், சனிக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் பிறந்த பெண் குழந்தை உயிரிழந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவா்களின் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்து விட்டதாகக் கூறி, அரசு மருத்துவமனை முன் குழந்தையின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியது:

மணிமேகலைக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் இருந்ததால் பிரசவ தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தினந்தோறும் குழந்தையின் அசைவு, இதயத்துடிப்பு சோதனை செய்யப்படும். மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்தபோது குழந்தையின் அசைவு இருப்பதாக தாய் தெரிவித்தாா். சனிக்கிழமை காலையில் மீண்டும் மருத்துவா்கள் சோதனை செய்தபோது குழந்தை அசைவு இல்லாததால் சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தோம். குழந்தை ஏற்கெனவே வயிற்றில் உயிரிழந்திருந்தது.

குழந்தையின் அசைவு இல்லாதது குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் இதயதுடிப்பை சோதனை செய்து முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்திருக்கலாம் என்றனா். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.