

சென்னை: வயதானவர்களுக்கு பதிலாக நியாயவிலைக் கடைக்கு வந்து யார் ரேஷன் பொருள்களை பெறலாம் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் இன்று பல்வேறு துறை ரீதியிலான கேள்விகளுக்கு, அந்தந்தத் துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது, வயதானவர்களுக்கு பதிலாக நியாயவிலைக் கடைக்கு வந்து யார் ரேஷன் பொருள்களை பெறலாம் என்பது குறித்து உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார்.
வயதானவர்களுக்கு பதிலாக 5 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் நியாயவிலைக் கடைக்கு வந்து ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்லலாம் என்றும், குடும்பத் தலைவரின் கடிதத்தை வைத்திருப்பவர்கள் நியாயவிலைக் கடைக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.