
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் கால அவகாசம் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற போது, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை கடந்த மே 14ஆம் தேதி தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்
அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் கால அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதனை மேலும் 6 மாதம் நீட்டித்து அதாவது, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதான் கடைசி கால அவகாசம். அதற்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.