47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் வெட்டிக் கொலை

விருதுநகர் அருகே வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன் முன்பகை காரணமாக வெள்ளிக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
கொலை செய்யப்பட்ட வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன்.
Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:54 am

DIN


விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன் முன்பகை காரணமாக வெள்ளிக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே வச்சக்கார பட்டியை சேர்ந்தவர் அனந்தராமன் (45). முன்னாள் ஊராட்சித் தலைவரான இவர், ஒரு திருமணத்தில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் பூசாரிபட்டி விலங்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் வழிமறித்து அனந்தராமனை வெட்டிக்  கொலை செய்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சகாரபட்டி போலீசார் அனந்தராமன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.