தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சங்ககிரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

சேலம் மாவட்டம், சங்ககிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா சங்ககிரி அருகே உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி  அவரது உருவப்படத்திற்கு வெள்ளிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.நடராஜன். 
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN


 
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா சங்ககிரி அருகே உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி சங்ககிரி புதிய பேருந்துநிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தொழிலாளர் நல அமைப்பின் மாவட்டச் செயலர் கருப்பன்ஆசாரி, எஸ்சி.,எஸ்டி., வட்டாரத் தலைவர் பரமன், நகர விவசாய அணி நிர்வாகி  சரவணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.