திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை:இளைஞா் கைது

சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 10:31 pm

DIN

சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சே.திருப்பதி (19). இவா் சென்னை திருவொற்றியூா் பகுதியில் தங்கியிருந்து, லாரி கிளீனராக வேலை செய்து வந்தாா். அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியுடன் திருப்பதிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதைப் பயன்படுத்தி திருப்பதி, அந்த மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி சில நாள்களுக்கு முன்பு வெளியூருக்கு அழைத்துச் சென்றாா். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோா், திருவொற்றியூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இந்நிலையில் போலீஸாா் திருப்பதியை வெள்ளிக்கிழமை கைது செய்து, கடத்தப்பட்ட மாணவியை மீட்டனா். விசாரணையில் திருப்பதி, மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், திருப்பதி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.