'செப்.3 முதல் 100% திரையரங்குகள் இயங்கும்: தற்போது 30% மட்டும் திறப்பு'

தமிழகத்தில் 30 சதவீத திரையரங்குகள் மட்டுமே இன்று இயங்க துவங்கியது. செப்டம்பர் 3-ம் தேதிக்கு மேல் 100 சதவீதம் திரையரங்குகள் செயல்படும்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம்
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம்

தமிழகத்தில் வரும் 3-ம் தேதிக்கு மேல் 100 சதவிகித திரையரங்குகள் செயல்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது 30 சதவீத திரையரங்குகள் மட்டுமே இன்று இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். 

கரோனா 2வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், திரையரங்குகள் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதைடுத்து கரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக அரசு  50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இன்று மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் மட்டும் செயல்படுகிறது. 

இது குறித்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், சக்தி சுப்பிரமணியம் கூறுகையில்,

''தியேட்டர்களை இயங்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தற்போது தியேட்டர்களை சத்தம் செய்யும் பணிகள் நடப்பதால் இன்று 30 சதவிகித தியேட்டர்கள் இயங்குகிறது. வரும் 3ம் தேதிக்கு மேல் 100 சதவீதம் இயங்கும்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தியேட்டரில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதை படம் பார்க்க வருபவர்கள் தெரிந்து கொள்ள பணியாளர்களின் உடைகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டேன் என்ற வாசகம் இருக்கும்.

மேலும் தியேட்டருக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முககவசம் வழங்கப்படும். மேலும் ஒரு காட்சிக்கு இடையே 45 நிமிடம் இடைவெளி வழங்கப்படும். இதன் மூலம் திரையரங்கை சுத்தம் செய்ய முடியும்.

தியேட்டருக்கு வருவதற்கு 40 படங்கள் காத்திருப்பில் உள்ளது. மக்களும் தியேட்டருக்கு வர ஆர்வமாக உள்ளனர். அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி திரையரங்ககள் இயங்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com