வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(ஆக.27) காலை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:52 am

DIN

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(ஆக.27) காலை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், கொளப்பாடு கிராமத்திலுள்ள ஸ்ரீ செல்லமுத்துமாரியம்மன் கோயிலில் புதிதாக மகா மண்டபம் அமைத்து அஷ்டலஷ்மி அவதார திருவுருவங்கள் அமைத்து புதிதாக கொடிமரம் அமைத்து அதில் பஞ்சலோக (செம்பு) கவசம் அமைத்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி ஆலயத்திற்கும் வர்ணங்கள் பூசப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டது‌.

Story image

அதன்படி, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி புதன்கிழமை முதல்கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை  2-ஆம் கால யாக பூஜை மற்றும் 3-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் நான்காம் கால யாக பூஜையும், மஹா பூா்ணாஹுதியும் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 9.30 மணியளவில் மேளதாளத்துடன் கும்பாபிஷேக கலசங்கள் புறப்பாடாகி  10‌ மணியளவில் விமான மகா கும்பாபிஷேகமும்,10.15 மணியளவில் மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.