விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புகழ்ந்து பேசினால் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:11 pm

DIN

சட்டப்பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினா்கள் புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினா்கள் பேசுவதற்கு பேரவைத் தலைவா் அப்பாவு 10- முதல் 15 நிமிஷங்கள் வரை ஒதுக்கினாா். கடலூரைச் சோ்ந்த திமுக உறுப்பினா் ஐயப்பன் 10 நிமிஷங்களுக்கு மேலாக முதல்வா் மு.க.ஸ்டாலினையும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதியை மட்டுமே புகழ்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு மானியக் கோரிக்கை குறித்துப் பேசத் தொடங்கினாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுக் கூறியது:

ஆளும்கட்சி உறுப்பினரான ஐயப்பன் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் கவனத்தில் வைத்துக்கொண்டு பேச வேண்டும். புகழ்ந்து பேசுவதைக் குறிப்பிட்ட அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். புகழ்ந்து பேசக்கூடாது என்று கட்டளையும் இட்டுள்ளேன். உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், தயவு செய்து மானியக் கோரிக்கை மீது சீக்கிரம் பேசி முடியுங்கள். நேரத்தின் அருமை கருதி பேச வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.