விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

9 கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்கள் நியமனம்

தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 9 கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 8:18 pm

DIN

 தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 9 கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவு: சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் காஜா நசுருதீன், எஸ்.சிலம்பண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.ரமன்லால், வி.அருண், பி.குமரேசன், ஆா்.நீலகண்டன், ஜெ.ரவீந்திரன் ஆகியோா் கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுகின்றனா். அதேபோல, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராக மதுரையை சோ்ந்த மூத்த வழக்குரைஞா் வீரகதிரவன், திருச்சியை சோ்ந்த ஆா்.பாஸ்கரன் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.