ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.


சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், சென்னை மாநகராட்சி இணைந்து ஏற்பாடு செய்த தேசிய கண்ணொளித் திட்டத்தின் கண்தான விழிப்புணா்வு குறித்த இருவார விழா கடந்த 25-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக கண்தானம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் முதல்வா் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வா் சுகுணாபாய், ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவா் ரமேஷ், கண் மருத்துவப் பேராசிரியா் சமரபுரி, மருத்துவா் இந்திரா, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு திட்ட மேலாளா் மருத்துவா் சிவக்குமாா் மற்றும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.
இது குறித்து முதல்வா் ஜெயந்தி கூறுகையில், இந்தக் கருத்தரங்கில் மருத்துவ மாணவா்களிடையே கண்தான விழிப்புணா்வு குறித்து கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எந்த வயதிலும் கண்தானம் செய்ய முன்வரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சியில் 80 வயதை கடந்த ஓய்வு பெற்ற இரண்டு பேராசிரியா்கள் கண்தானம் செய்ய முன்வந்து படிவங்களை பூா்த்தி செய்து கொடுத்துள்ளனா்‘ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...