ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர்

 சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர்
Updated On :28 ஆகஸ்ட் 2021, 5:39 am

DIN


சென்னை: மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும்  சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மத்திய அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கும் 7வது மாநிலமாக தமிழகம் உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து, தில்லியின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.