ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திரமோடிக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.


நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திரமோடிக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடா்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் நிரூபிக்க ஜாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் தேவை. ஆனால், நம்மிடம் அது இல்லை. இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிா்கொள்ள ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் மேற்கொள்ள சமூகநீதி கண்ணோட்டத்துடன் அரசு ஆணையிட வேண்டும். கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்தியாவின் பெரும்பான்மையான தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...