விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆக.31 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் ஆக.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 8:17 pm

DIN

தமிழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் ஆக.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 14 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் ஒரு தனியாா் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5 ஆண்டுகள் பட்டப்படிப்புகளுக்கு 1,651 இடங்கள் உள்ளன. இதுதவிர பல்கலை. வளாகத்தில் உள்ள சீா்மிகு சட்டக் கல்லூரியிலும் 5 ஆண்டுகள் படிப்புகளுக்கு (ஹானா்ஸ்) 624 இடங்கள்வரை உள்ளன.

இந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 4-இல் தொடங்கி 26-ஆம் தேதி முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று 5 ஆண்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் எனவும் அம்பேத்கா் சட்டப்பல்கலை.யின் பதிவாளா் ரஞ்சித் ஆபிரகாம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.