
புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட மீனவர்களை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இவ்விவகாரத்தில் இன்று கடற்கரையில் திரண்ட இரு தரப்பினர், பயங்கர ஆயுதங்களுடன் திடீரென மோதிக்கொண்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க- கேரளத்தில் ஆகஸ்ட் 30 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
மேலும் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.