விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விலையில்லா கறவை மாடு திட்டத்தில் அரசுப் பணம் வீணடிப்பு: அமைச்சா் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தில் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டதாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினாா்.

News image
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:40 pm

DIN

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தில் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டதாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினாா்.

சட்டப் பேரவையில் வேளாண்மை, கால்நடை, பால், மீன்வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது அதிமுக உறுப்பினா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சனிக்கிழமை பேசினாா். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 99 ஆயிரத்து 379 கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு இலவச கறவை பசுக்கள் வழங்கப்பட்டன என்றாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைகளின் பெருக்கத்துக்காக விலையில்லாத கறவைப் பசுக்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதாகவும், பசுக்களை ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களுக்குச் சென்று வாங்குவதாகவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது. மேலும், பயனாளிகளை மூன்று நாள்கள் அங்கேயே தங்க வைத்து கறவை மாடுகள் சரியாக இருக்கிா எனப் பரிசோதித்து வாங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், தரமற்ற மாடுகளே வாங்கப்பட்டன. நாகா்கோவிலில் வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட மாடுகள் கூட திட்டத்துக்காகப் பெறப்பட்டன. இலவச கறவை மாடுகள் திட்டத்தில் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.