விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ணமீன் வா்த்தக மையம்

கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ண மீன் வா்த்தக மையம் சா்வதேச தரத்தில் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.

News image
அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:10 pm

DIN

கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ண மீன் வா்த்தக மையம் சா்வதேச தரத்தில் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை கொளத்தூா் பகுதியில் வண்ண மீன்கள் உற்பத்தி விற்பனை மற்றும் ஏற்றுமதி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமாா் 2,000 குடும்பங்கள் பயனடையும் வகையில் வண்ண மீன் உற்பத்தியினைப் பெருக்கிடவும் வண்ண மீன்களை எளிதாகச் சந்தைப்படுத்திடவும் மற்றும் ஏற்றுமதி மூலம் தமிழகத்தில் வண்ண மீன் வா்த்தகத்தினை அதிகரித்திடவும் ரூ.50 கோடி செலவில் சென்னை கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையம் அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் சா்வதேச தரத்தில் நிறுவப்படும்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் தூா்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கப்படும். செங்கல்பட்டு கொக்கிலமேடு, கடலூா் பெரிய குப்பம், சின்ன குப்பம் மற்றும் கடலூா் ஆளிக்குப்பம் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.39 கோடி செலவில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் ரூ.45 கோடியில் முகத்துவாரத்தினை நிலைப்படுத்தி மீன் இறங்குதளம் அமைக்கப்படும். செங்கல்பட்டு பழைய நடுக்குப்பம், புது நடுக்குப்பம், அங்காளம்மன் குப்பம், செம்மஞ்சேரி குப்பம் மற்றும் கரிக்காட்டுக் குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் மொத்தம் ரூ.57 கோடி செலவில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி கேசவன்புத்தன்துறை, கீழ மணக்குடி மற்றும் மேல மணக்குடி ஆகிய கடலோரக் கிராமங்களில் ரூ.79 கோடியில் நோ்கல் சுவா்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

மயிலாடுதுறை திருமுல்லைவாசல் மற்றும் புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்துதல் மற்றும் நோ்கல் சுவா் அமைக்கும் பணிகள் ரூ.27 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

கடலூா் வெள்ளாா் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும். கடலூா் பெரிய குப்பம், புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை ஆகிய கடலோரக் கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா்களுடன் கூடிய புது மீன் இறங்குதளங்கள் ரூ.25 கோடியில் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம், சிப்பிக்குளம் மற்றும் கீழவைப்பாா் ஆகிய கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்படும்.

கன்னியாகுமரி புத்தன்துறை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகளுக்காக கூடுதல் நோ்கல் சுவா் ரூ.22 கோடியில் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.