செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புகைப்படங்களைப் பார்க்க: கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நாளை மறுநாள் (செப். 1) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பள்ளி மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவ, மாணவிகள் கட்டணமின்றி செல்லலாம்.
அரசுக் கல்லூரி, அரசு ஐடிஐ, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.