மாணவர்களுடன் அமர்ந்து மாணவிகள் படிக்கக்கூடாது: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் மாணவர்களுடன் மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
மாணவர்களுடன் அமர்ந்து மாணவிகள் படிக்கக்கூடாது: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் மாணவர்களுடன் மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றியுள்ளனர். மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

தலிபான்களின் கையில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளதால் அங்குள்ள பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. 

ஆனால், பெண்களுக்கான உரிமைகள், சுதந்திரம் வழங்கப்படும் என்று தலிபான்கள் கூறிய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது, எப்படி பேசுவது என்று எங்களுடைய படைகளுக்குத் தெரியாது. எனவே, அவர்களுக்கு இதுகுறித்து முறையான பயிற்சி அளிக்கும்வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, முகத்தை மறைக்கும்படி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் கூறுவதுடன், திருமணம் செய்துகொள்ள பெண்கள், சிறுமிகளை கடத்துவதாகவும் செய்திகள் வெளிவந்தன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நியமித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி, 'மாணவிகள், மாணவர்கள் என இருபாலரும் ஒன்றாக அமரக்கூடாது. மாணவிகள் தனி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். மாணவிகளுக்கென தனி வகுப்பறை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆப்கன் பெண்களுக்கு படிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால், மாணவர்களுடன் மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com