முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அஜித்குமாருக்கு எஸ்யூவி கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்!

மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா எடிசன்’ நடிகர் அஜித்குமாருக்கு பரிசாக வழங்கியது.

News image

மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா எடிசன் காருடன் அஜித்குமார் - X

Updated On :14 மார்ச் 2026, 6:18 pm IST

நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது.

இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களான XUV 3XO EV, BE 6, XEV 9e, XEV 9s ஆகிய மாடல்கள் மூலம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது.

இந்த மின்சார SUV-க்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், இணைய இணைப்பு வசதி, உயர் திறன் கொண்ட பேட்டரிகளுடன் ஆகியவற்றுடன் சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றன.

இதனைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பிரீமியர் ஒற்றை இருக்கை எலக்ட்ரிக் ரேஸிங் தொடரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

கார் பந்தயங்களின் மீதான மஹிந்திராவின் ஆர்வம் காரணமாக, எலக்ட்ரிக் பந்தயங்களின் உச்சமாகக் கருதப்படும் 'ஃபார்முலா இ' (Formula E) சாம்பியன்ஷிப் போட்டியில் அந்நிறுவனம் பங்கேற்று வருகின்றது.

மஹிந்திரா நிறுவனம் ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதைத் தொடர்ந்து புதிதாக BE 6 சிறப்பு எடிசன் ஃபார்முலா இ SUV மின்சாரத் திறன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார் அதிவேகத் திறன்கொண்ட பல வகையான கார்களை சொந்தமாக வைத்துள்ள நிலையில் இந்த புதிய மின்சார காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி நடிகர் அஜித்குமாருக்கு பரிசாக வழங்கியுள்ளது.

உலகின் முதல் ஃபார்முலா தீம் கொண்ட மின்சார SUV கார் இதுவாகும்.

இந்த கார் FE2, பேக் FE3 என்ற இரு வகைமைகளில் வெளியாகியுள்ளது. 79 kWh பேட்டரி திறன் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக 202 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எவரஸ்ட் ஒயிட், டாங்கோ ரெட், ஸ்டீல்த் பிளாக், ஃபயர்ஸ்ட்ராம் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து கார் பந்தயங்களில் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கென ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியையும் அஜித்குமார் சொந்தமாக வைத்துள்ளார்.

துபையில் கார் பந்தயங்களில் கலந்துகொண்ட அவர் தற்போது அடுத்தப் படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சில நாள்களுக்குமுன் தமிழ்நாடு வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் நேற்று தனது புதிய மாடல் காரை அவருக்குப் பரிசாக வழங்கியது.

Mahindra has gifted its new model, the ‘Mahindra BE 6 Formula Edition’ car, to actor Ajith Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.