
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் சிலை சேதமடைந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சாரதா ரவுண்டானாவில் அதிமுக நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருஉருவ சிலை உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் திருஉருவ சிலை வலது கை மற்றும் ஏணிப்படிகள் சேதமடைந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர செயலாளர் அ.மோகன் தலைமையில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகர செயலாளர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்தனர்.
இதையும் படிக்கலாமே... ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் வீட்டில் 4 மாதத்தில் நிகழ்ந்த 2வது துயரம்
இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தகவறிந்த ஆத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் எஸ்.மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் அதிமுகவினரிடையே பேசி சிசிடிவி கேமிரா உதவியுடன் மோதிய வாகனத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.