வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

13 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) பலத்தமழை பெய்யக்கூடும்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 11:22 pm

DIN

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) பலத்தமழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:-

தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூா், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூா் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

டிச.6: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிசம்பா் 6-ஆம் தேதி இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

டிச.7: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.8: தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பா் 8-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தலா 90 மி.மீ., விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 80 மி.மீ., சேலம் மாவட்டம் மேட்டூரில் 70 மி.மீ., கரூரில் 60 மி.மீ., நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராசிபுரம், சேலத்தில் தலா 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் தலா 40 மி.மீ., மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிஸா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.