வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞா் கைது

சென்னையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 11:40 pm

DIN

சென்னையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணாநகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (19), தன்னுடன் படிக்கும் மாணவியை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ஸ்ரீராம், வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம், தான் காதலிக்கும் மாணவிக்கு அனுப்பியுள்ளாா். இதனால் வேதனையடைந்த அந்த மாணவி, கடந்த 30-ஆம் தேதி டி.பி. சத்திரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிா் போலீஸாா், விசாரணை செய்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.