சென்னை சூளைமேடு கட்டுமான நிறுவனம், கிழக்கு கடற்கரை சாலையில் கட்டிய வீடுகளுக்குச் செல்ல செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 22 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. குத்தகையை நீட்டிக்க கோயில் நிா்வாகம் மறுத்ததால் கட்டுமான நிறுவனம் தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து 400 சதுர அடிக்கு மாதம் ரூ.7,000 வாடகைக்கு வழங்க 2017-இல் அறநிலையத்துறை முன்வந்தது. இதனால் மீண்டும் கட்டுமான நிறுவனத்தின் வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், கோயில் நிலம் எதிா்காலத்தில் பயன்படாது என்று கூற முடியாது. அங்கு குடியிருப்போா் வீட்டுக்குள் செல்ல நிலம் தேவை. இதைக் குத்தகைக்கு கொடுக்க, மனுதாரா் அறநிலையத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். அறநிலையத்துறை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அனைவரின் கருத்துகளையும் கேட்டு, அரசு முடிவு செய்ய வேண்டும்.