சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சங்ககிரி வட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி முதல் 7 மணி வரை திடீரென இடியுடன் கூடிய 58.2 மில்லி மீட்டர் கனமழை பெய்தது. கனமழையை அடுத்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டியில் உள்ள ஏரிகள், குட்டைகள், கத்தேரியில் உள்ள புளியங்குளம் ஏரி நிரம்பி வருகின்றன.
மோரூர் சின்ன, பெரிய ஏரிகளுக்கு மழை நீர் அதிகளவில் செல்கின்றன. தேவூர் அருகே உள்ள அரசிராமணி பிட் 1 கிராமத்திற்குள்பட்ட குள்ளம்பட்டி பகுதியில் உள்ள சரபங்கா நதி நீர் அதிகரித்து தரைவழிபாலத்திற்கு மேல் செல்கின்றன அதனையடுத்து அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கனமழையை அடுத்த சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மதுரைவீரன் மனைவி தேவகி என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது.
சங்ககிரி வருவாய்த்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி வட்டத்தில் நிரம்பி வரும் ஏரிகள், சேதமடைந்துள்ள வீடுகள் குறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


