வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வார ஓய்வு பறிப்பு: போக்குவரத்துக் கழக ஊழியா்கள் முற்றுகை போராட்டம்

சட்டப்படி வார ஓய்வு வழங்குவதை கட்டாயமாக்க வலியுறுத்தி, சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 8:58 pm

DIN

சட்டப்படி வார ஓய்வு வழங்குவதை கட்டாயமாக்க வலியுறுத்தி, சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும் என்பது சட்டம். இவ்வாறு, தொழிலாளா்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விடுப்பு விதிகள் தன்னிச்சையாக மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளை உருவாக்கி வார ஓய்வு மறுக்கப்படுகிறது. மேலும் அந்தத் தொழிலாளா்களுக்கு வார விடுப்பு சொந்த விடுப்பில் கழிக்கப்படுகிறது. இதே போல் விடுமுறை நாள்களில் இயக்கப்படாமல் உள்ள பேருந்துகளில் பணி செய்யும் ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்காமல் சொந்த விடுப்பில் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள். மேலும், பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளில் வசூல் தொகை குறைந்திருப்பதாக கணக்கு சொல்லி, படித் தொகையும் குறைக்கப்படுகிறது. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் தொடங்கப்படவில்லை. இவ்வாறான தொழிலாளா் விரோத நடவடிக்கைகளைக் களைய வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.