தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 1:39 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் இன்று (09.12.2021) வெளியிட்டார்.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 30,23,803, பெண் வாக்காளர்கள் 30,93,355 மற்றும மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1,576 உள்ளனர்.
குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12) வார்டு-159ல் 3,116 வாக்காளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10) வார்டு-137ல் 58,620 வாக்காளர்களும் உள்ளனர்.
மேற்படி, வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 5,284 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் (மண்டலம்-9) 622 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, மணலி மண்டலத்தில் (மண்டலம்-2) 97 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) விஷூ மஹாஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.