பாரதியாரின் 140ஆவது பிறந்த நாள்: தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை

பாரதியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்வில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
1 min read

பாரதியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்வில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெரும்புலவன் பாரதியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை 11.12.2021 காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக, 14 முத்தான அறிவிப்புகளை அறிவித்தார். அவற்றில் குறிப்பாக, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள் அரசின் சார்பில் ஆண்டுதோறும் “மகாகவி நினைவு நாளாக” கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். ஓராண்டுக்குத் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளதன் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 44 வாரங்களுக்கான தொடர் நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சியானது செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனால் கடந்த 04.12.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று பாரதியின் புகழ்பாடும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் கவியரங்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதி நினைவு நாள் விழா பேருரையில் பெரும்புலவன் பாரதி மறைந்து 100 ஆண்டுகள் கடந்தாலும், அவரின் சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர சிந்தனைகளாகும். குடும்பமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்துக் கேள்வி கேட்டவர் பாரதியார். அன்பு வேண்டும் – அறிவு வேண்டும் – கல்வி வேண்டும் – நீதி வேண்டும் இந்த நான்கையும் பாரதி என்றும் விரும்பினார். இன்றும் நமக்கு பெரும்புலவன் பாரதி அவசியம் தேவை” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
இத்தகைய மாபெரும் சிறப்புமிக்க மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் நாள் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையிலும், எட்டயபுரத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com