ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வீரர்களுக்கு அஞ்சலி: உதகையில் இன்று கடையடைப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

News image
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
Updated On :10 டிசம்பர் 2021, 3:17 am

DIN

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

குன்னூரில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உடல் ராணுவ விமானம் மூலம் வியாழக்கிழமை மாலை தில்லி கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகை, பந்தலூர், குன்னூர், கூடலூரில் உள்ள கடைகள், உணவகங்கள் இன்று மாலை 6 மணிவரை அடைக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றுலா வாகனங்களும் மாலை வரை இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.